கொலம்பியா சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கைதிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள துலுவா நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தின்போது, சிறையில் உள்ள சிலர் தீயை வைத்துள்ளனர். மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சிறை முழுவதும் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் 180 அறைகளில் அடைக்கப்பட்டிருந்த 1267 பேரில், தீயின் கோரப்பிடியில் சிக்கி 51 கைதிகள் தீயில் சிக்கி உடல் கருகி பலியாகினர். மேலும், 24 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.